தூத்துக்குடியில்  டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் !வரும் 25 ம் தேதி 2 மணி நேரம் கடை அடைப்பு என அறிவிப்பு !
தூத்துக்குடியில்  டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் !வரும் 25 ம் தேதி 2 மணி நேரம் கடை அடைப்பு என அறிவிப்பு !

 


இன்று காலை தூத்துக்குடி புதிய  நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு அணைத்து டாஸ்மாக் சங்க குழு உறுப்பினர்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்  ஆண்டுக்கு 33ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம்   ஈட்டி தரும்  அரசு நிறுவனம் டாஸ்மாக் ஆகும் .இந்த நிறுவனத்தின் மூலம் தான் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை  இன்று வரை அரசு பணி நிரந்தரம் செய்யாமல் தொகுப்பு ஊதியம் பெரும் தொழிலாளர்களாவே வைத்து வருகிறது.அதில் பணிபுரியும் ஊழியர்கள் நீண்ட நாட்களாக தங்களை நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்ய  அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என  நீண்ட  நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்கள் ஒன்றினைந்து இன்று புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


ஆர்ப்பாட்டத்தில் பணியாளர்களை நிரந்தர படுத்தவேண்டும் ,மது விற்பனையில் கேரளா அரசு வழிமுறகளை பின்பற்றவேண்டும் ,கொரனா தோற்று பரவாமல் பணியாளர்க்கை பாதுகாக்க வேண்டும் ,இறந்த பணியாளர் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கவேண்டும் ,,கொரனா நோய் தொற்று காலத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் மாதம்  10000 சிறப்பு ஊதியம் வழங்கவேண்டும் ,சட்டத்திற்கு எதிரான மது விற்பனை  ,ஆய்வு என்ற பெயரில் பலிவாங்குதல் நடவடிக்கைளை தடுக்கவேண்டும்  என போன்ற   10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்


இந்த ஆர்ப்பாட்டம்  17.08.2020 முதல் 21.08.2020 வரை  ஒரு நாளைக்கு ஒரு தாலுகா வீதம் நடைபெறும் என்றும் தங்கள் கோரிக்கைகளை  நிறைவேற்ற கோரி  வரும் 25.08.2020 அன்று காலை 10 மணிமுதல் 12 மணிவரை கடை அடைப்பு போராட்டம் நடைபெரும் எனவும் அனைத்து டாஸ்மாக் சங்க குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். தூத்துக்குடி தாலுகாவில் இன்று நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில்  ஏ ஐ டி யு சி சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமை தாங்கினார் . இதில்   தமிழக அரசு டாஸ்மாக் சங்கம் புங்கலிங்கம், இசக்கி. தொ.மு.ச,சங்கம் சந்தாணசுப்பரமணியன் , முருகன், காசிபெருமாள் . சி ஜ டி யு சங்கம் பிரான்சீஸ்  ,எல் .பி  .எப் .சங்கம் குமார் ,மாரியப்பன் ஆகிய சங்க பொறுப்பாளர் கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Popular posts
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி கோரிய மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்!- உயர்நீதிமன்றம்!'
தூத்துக்குடி உப்பாத்து ஓடை ஆக்கிரமிப்பு !அபாய  நிலையில் 25 விவசாய கிராமங்கள் !சார் ஆட்சியர் ஆய்வு .
Image
தூத்துக்குடியில் பழைய தங்கம் சேதாரம் என ஏழைகளிடம் பணம் பறிக்கும் நகைக்கடைகள் !
Image
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் சூறைக்காற்றால் வாழைபயிர் சேதம் விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம். காப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!
Image
தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க தி.மு.க எப்போதும் உடன் நிற்கும்”: மே தின நாளில் மு.க.ஸ்டாலின் உறுதி!
Image