தூத்துக்குடி உப்பாத்து ஓடை ஆக்கிரமிப்பு !அபாய நிலையில் 25 விவசாய கிராமங்கள் !சார் ஆட்சியர் ஆய்வு .
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளம் ,பெட்டைக்குளம் உபரி நீர் செல்லும் உப்பாத்து ஓடையை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது குளத்தை சுற்றி உள்ள 25 விவசாய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது ஆக்கிரமிப்பை அகற்றி தர தூத்துக்குடி ஆட்சியர் சந்திப் நந்தூரியிடம் முள்ளக்காடு ,முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது .
கோரம்பள்ளம் குளம் ,பெட்டைக்குளம் சுமார் 2200 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடி மாவட்டத்தின் மைய பகுதில் உள்ளது .இக்குளத்தில் மூலம் 5 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் நெல் வாழை விவசாயங்கள் நடைபெற்று வருகிறது .இக் குளம் 1860 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு குளத்தின் உபரி நீர் வெளியேற 48 மதகுகள் வைத்து அணை கட்டப்பட்டது . காலப்போக்கில் அது 24 மதகுகள் வைத்து 330 மீட்டர் அகலம் 10 கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்தஉப்பாத்து ஓடை வழியாக மழைகாலங்களில் குளத்திற்கு வரும் கட்டு வெள்ளங்கள் தூத்துக்குடி அனல் மின் நிலையம் அருகில் உள்ள கடலில் சென்று கலக்கும் .ஆனால் தற்போது தனியார் நிறுவனங்கள் 300 மீட்டர் ஆழமுள்ள ஓடையை 160 மீட்டராக சுருங்கும் அளவிற்கு ஆக்கிரமிப்பு
செய்துள்ளனர் .இதனால் மழைக்காலங்களில் முள்ளக்காடு ,அத்திமரப்பட்டி ,காலாங்கரை ,முத்தையாபுரம் ,வீரநாயகன்தட்டு உட்பட 25 க்கும் அதிகமான விவசாய கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது .இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக கடந்த 2015 ஆம் மழையின் பொது தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது அனைவரும் அறிந்தது ..விவசாயிகளின் ஆக்கிரமிப்பை அகற்றி தரவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற ஆட்சியர் உடனடியாக சார் ஆட்சியாளரை ஆய்வுக்கு அனுப்பினார் அதனை ஏற்ற சார் ஆட்சியர் (பயிற்சி )அய்யனார் உப்பாத்து ஓடையில் ஆய்வு நடத்தினார். பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகள் அவரை சந்தித்து ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை காண்பித்து அதை மீட்க வலியுறுத்தினர்.
ஆய்வின் போது, முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்க தலைவர் அழகுராஜா, பொருளாளர் சின்னக்குட்டி, 25 கிராம உப்பாத்து ஓடை விவசாய குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, ஜேஎஸ் நகர் சங்க நிர்வாகி முத்துகிருஷ்ணன், ராஜேந்திரன்,பெரியசாமி உட்பட பல விவசாய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.