தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் சூறைக்காற்றால் வாழைபயிர் சேதம் விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம். காப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!

தூத்துக்குடியில் நேற்று திடிரென்று வீசிய சூறைக்காற்று விசியது.கோரம்பள்ளம்

பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக பயிரிடப்பட்டிருந்த வாழைத்தார்கள் அறுவடை செய்ய தயாராக இருந்தன இந்த நிலையில் அத்திமரபட்டி,காலான்கரை,வீரநாயக்கன்தட்டு ,முள்ளக்காடு, கோரம்பள்ளம் பகுதிகளில் வீசிய பேய்காற்றில் பல ஏக்கர் வாழைகள் தாருடன் சாய்ந்தும் ஒடிந்தும் கீழே விழுந்ததில் விவசாயிகளுக்கு பல லட்சம் ருபாய் மதிப்புள்ள வாழைகள் சேதம் அடைந்தன.  பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாமால் இருந்த கோரம்பள்ளம் குளத்தை கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்  குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தியதில் போதுமான அளவு தண்ணிர் இருந்ததால் விவசாயிகள் கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்தும் நம்பிக்கையுடன் வாழைபயிரிட்டனர்.நேற்று வீசிய பேய்காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததில் அப்பகுதி விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.வேளான்மைதுறை அதிகாரிகள் சேதம் அடைந்த வாழைகளை கணக்கு எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டங்கள் மூலம் நஷ்டயீடு வழங்க வேண்டும் என  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரிக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

 

Popular posts
தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க தி.மு.க எப்போதும் உடன் நிற்கும்”: மே தின நாளில் மு.க.ஸ்டாலின் உறுதி!
Image
தூத்துக்குடியில்  டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் !வரும் 25 ம் தேதி 2 மணி நேரம் கடை அடைப்பு என அறிவிப்பு !
Image
தூத்துக்குடி உப்பாத்து ஓடை ஆக்கிரமிப்பு !அபாய  நிலையில் 25 விவசாய கிராமங்கள் !சார் ஆட்சியர் ஆய்வு .
Image
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி கோரிய மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்!- உயர்நீதிமன்றம்!'