தூத்துக்குடி DSF பிளாசா ஹோட்டல் சார்பாக சுற்று வட்டார பகுதி மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது !
கொரானா தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது இந்தநிலையில் மக்கள் வேலைக்கு போகமுடியாமலும் போதிய உணவு கிடைக்காமலும் ஏழை மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர் .
இந்த நிலையில் தூத்துக்குடி DSF பிளாசா ஹோட்டல் சார்பாக அதன் சுற்று பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு முட்டை குழம்புடன் கூடிய மோர் பாயாசம் அப்பளம் என ஹோட்டலில் ஒருவருக்கு கொடுக்கப்படும் உணவு போன்ற சுகாதாரமான உணவு கொடுக்கபட்டது . கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் இது லாக் டவுன் முடியும் வரை மதியம் 1 மணி முதல் 1.30 வரை கொடுக்கப்படும்என்றும் DSF பிளாசா குழுமங்களின் இயக்குனர் D.கிப்ட்சன் தெரிவித்தார் .DSF பிளாசா குழுமங்களின் சார்பாக காஜா புயலில் பாதித்தவர்களுக்கு மற்றும் சுனாமியில் பாதித்த மக்களுக்கு என பல உதவிகள் செய்த DSF குழுமம் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தூத்துக்குடி DSF பிளாசா குழுமங்களின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் 10 லச்சத்திற்கான காசோலையை DSF பிளாசா குழுமங்களின் இயக்குனர் D.கிப்ட்சன் வழங்கினார் .இது போன்ற மக்கள் சேவையில் ஈடுபடும் DSF பிளாசா குழுமம் தூத்துக்குடி பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது .